அழுகிய நிலையில் மூதாட்டியின் சடலம் மீட்பு - தனியாக வாழ்ந்த முதியவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

சென்னையில் தன் மனைவி உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை அணைத்தபடி துர்நாற்றத்துடன் வசித்து வந்த முதியவரை மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழுகிய நிலையில் மூதாட்டியின் சடலம் மீட்பு - தனியாக வாழ்ந்த முதியவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
x
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் பொன்னுமணி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மனைவி கோமளா என்கிற மலையாளத்தம்மாள். அண்மைக்காலமாக  கோமளா வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் கணவர் பொன்னுமணி மட்டும் அவ்வப்போது வெளியே சென்று பொருட்களை வாங்கி  வந்துள்ளார் . கடந்த சில நாட்களாக அவர்களின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக  வந்த்தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் ,  கோமளாவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததும், பொன்னுமணி அவரை அணைத்தபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அரை மயக்கத்தில் இருந்த பொன்னுமணியை மீட்ட போலீசார் அவருக்கு முதலுதவி கொடுத்து விசாரித்த போது  எதுவும் சொல்ல  மறுத்து கண்ணீர் விட்டுள்ளார் . வயது மூப்பு காரணமாக மூதாட்டி உயிரிழந்திருக்கலாம் என்றும், மனைவி இறந்த சோகத்தை தாங்க முடியாத பொன்னுசாமி தானும் அவருடன் சேர்ந்து உயிரிழக்க திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 3 நாட்களுக்கும் மேலாக உயிரிழந்த மனைவியின் சடலத்துக்கு மத்தியில் அவர் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.  அக்கம் பக்கத்தில் அவ்கள் யாருடனும் பேசாமல் இருந்த தால் ,  இவரின் உறவினர்கள் யாரேனும் இருந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர். தனித்து வாழ்ந்த ஒரு தம்பதியருக்கு நேர்ந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்