கோவை : முக கவசம் அணியாமல் வந்தவரிடம் மனுவை வாங்க மறுத்த ஆட்சியர்
கோவை சூலூர் பகுதியில் புதிய பேருந்து நிலைய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராசமணி ஆய்வு செய்தார்.
கோவை சூலூர் பகுதியில் புதிய பேருந்து நிலைய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராசமணி ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகி மாணிக்கம் என்பவர் முக கவசம் அணியாமல் மனு அளித்தார். முக கவசம் அணியாமல் வந்ததற்கு ஆட்சியர் கண்டித்ததும், அந்த நபர் வேட்டியை மூக்கில் வைத்தார். ஆனால், அவரிடம் மனுவை திருப்பி கொடுத்த ஆட்சியர் முக கவசம் அணிந்து வருமாறு வலியுறுத்தினார். அதன்பின்னர் அந்த நபர் முக கவசம் அணிந்து வந்து அளித்த மனு குறித்து அவரிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
Next Story

