விநாயகர் சிலை விற்பனை மந்தம் - வியாபாரிகள் வேதனை

வரும் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாட உள்ள நிலையில் ஊரடங்கு காரணமாக விநாயகர் சிலை விற்பனை மந்தமாகக் காணப்படுகிறது.
விநாயகர் சிலை விற்பனை மந்தம் - வியாபாரிகள் வேதனை
x
வரும் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாட உள்ள நிலையில் ஊரடங்கு  காரணமாக விநாயகர் சிலை விற்பனை மந்தமாகக் காணப்படுகிறது. சென்னையில் வழக்கமாக ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்படும் நிலையில் இம்முறை 30 ரூபாய் முதல் அதிகபட்சமாக மூவாயிரம் ரூபாய் வரை மட்டுமே சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

மலை சாலையில் மண்சரிவை தடுக்கும் கூண்டு சுவர் - மலை ரயில் பாதையிலும் கூண்டு சுவர் அமைக்க  கோரிக்கை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியே உதகை செல்லும் மலைச்சாலையில் ஏற்படும் மண் சரிவை தடுக்க நெடுஞ்சாலை ஆணையம் கூண்டு சுவர் அமைத்தது.கடந்த 2010ஆம் ஆண்டு  சிமெண்ட் மணல் மற்றும் செங்கல் பயன்படுத்தி கட்டாமல் இரும்பு கம்பிகள், கருங்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த சுவர் கட்டப்பட்டிருந்தது. அதன் பிறகு அந்த இடத்தில் மண் சரிவு ஏற்படாததால் மலை ரயில் பாதையிலும் கூண்டு சுவர்களை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி வழிப்பறி - பெண்ணிடம் தங்க நகை பறிப்பு 

விழுப்புரம் மாவட்டம்  கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த அலமேலுவின்  வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், அலமேலுவின் மகன் கஞ்சா வழக்கில் மாட்டிக்கொண்டு விட்டதாகவும்,  விசாரணைக்கு வருமாறும் கூறி அவரை அழைத்து சென்றுள்ளார். பின்னர் நடுவழியில் கத்தி கொண்டு அலமேலுவை கிழித்து விட்டு, அவர் அணிந்திருந்த தங்க செயின் மற்றும் தாலியை பறித்துச் சென்றுள்ளார். தற்போது மீட்கப்பட்ட அலமேலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒற்றை காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி - யானை தாக்கியதில் கடந்த 4  நாட்களில் 3 பேர் உயிரிழப்பு

ஒசூர் அருகேயுள்ள ஆப்ரி கிராமத்தை சேர்ந்த முதியவர் முனுசாமி, காட்டுப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது ஒற்றை யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரது உறவினர்களுடன் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். கடந்த நான்கு நாட்களில் அடுத்தடுத்து மூன்றுபேர் காட்டுயானை தாக்கி உயிரிழந்திருப்பது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சிலை செய்யும் ஆலைகளுக்கு வருவாய் துறை சீல் வைப்ப- அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்த 10 பேர் கைது

கொரோனா காரணமாக விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று அடிக்குமேல் காகிதக் கூழை பயன்படுத்தி விநாயகர் சிலை செய்து வரும் ஆலைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வட்டாட்சியர்கள் அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீல் வைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.  அய்யம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும்  40-க்கும் மேற்பட்ட  விநாயகர் சிலை செய்யும் ஆலைகளை அதிகாரிகள் சீல் வைத்தனர்,. அதற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்,.  இந்த நிலையில் அதிகாரிகளை பணி செய் விடாமல் தடுத்த காரணத்திற்காக  அய்யம்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க நிர்வாகி உட்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்,

Next Story

மேலும் செய்திகள்