தமிழகத்தில் மேலும் 5,950 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 55 ஆக உயர்ந்துள்ளது. இதே போல, ஒரே நாளில் 70 ஆயிரத்து 450 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக 6 ஆயிரத்து 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 54 ஆயிரத்து 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பு

சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதிதாக ஆயிரத்து 196  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், சென்னையில் மொத்த பாதிப்பு 1லட்சத்து 16 ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது. இதே போல சென்னையில் ஆயிரத்து 9 பேர் புதிதாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையை தவிர பிற மாவட்டங்களில், 4 ஆயிரத்து 754 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்