கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டார்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையில் இருந்து கண் விழித்துள்ளார்.
x
கொரோனா பாதிக்கப்பட்டு, கடந்த 5ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதாக மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்டது. இதனால் அவரது ரசிகர்களும், திரை உலகினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த நிலையில், தற்போது எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் சற்று தேறி வருவதாக மருத்துவமனை வட்டார  தகவல்கள் தெரிவிக்கின்றன. மயக்க நிலையில் இருந்த அவர் தற்போது கண் விழித்துள்ளதாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் மூன்றாவது தளத்தில் உள்ள  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஐந்தாவது தளத்தில் உள்ள பிரத்யேக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் தற்போது மாற்றப்பட்டுள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு, நுரையீரல் தொற்றுக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்