தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 860 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் புதிதாக  5 ஆயிரத்து 860 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 105 ஆக உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா உயிரிழப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 ஆயிரத்து 236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 54 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


சென்னையில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று ஆயிரத்து 179 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 681 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் மேலும் ஆயிரத்து 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் இன்று 26 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. பிற மாவட்டங்களில் 101 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 11 ஆயிரத்து 321 சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்