100% தேர்ச்சி என கூறிவிட்டு குழப்புவதா : தனித் தேர்வர்கள் நிலை என்ன? - தங்கம் தென்னரசு கேள்வி

தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பதிவு செய்திருந்த தனித் தேர்வர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறு​த்​தி உள்ளார்.
100% தேர்ச்சி என கூறிவிட்டு குழப்புவதா : தனித் தேர்வர்கள் நிலை என்ன? -  தங்கம் தென்னரசு கேள்வி
x
தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பதிவு செய்திருந்த தனித் தேர்வர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறு​த்​தி உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அனைவரும் தேர்ச்சி என முதலில் அறிவித்த அரசு, பின்னர், தங்களின் தேர்வு முடிவு விடுபட்டிருப்பதாக மாணவர்கள் புகாருக்கு பிறகு, மறு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், 23 ஆயிரத்து 581 பேரின் தேர்ச்சி நிலை குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிடவில்லை. எனவே, அமைச்சரும், அரசும் தலையிட்டு, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த தனித் தேர்வர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்