விமானத்தில் சென்னை திரும்புவோருக்கு தனிமை விதிகள் மாற்றம் - தமிழக அரசு
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் விமானத்தில் சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் விமானத்தில் சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், உடனடி மருத்துவ தேவை உறவினர்கள் மறைவுக்கு வந்தோர், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு மட்டுமே இதுவரை தனிமைப்படுத்துதலில் இருந்த விலக்கு அளிக்கப்பட்டதாகவும்.. இனி 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருவோருக்கும் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று சென்னை வருவதற்கு முன்பு 96 மணி நேரத்திற்குள் பிசிஆர் சோதனை செய்து நெகட்டிவ் முடிவு வந்தோருக்கும் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story