"மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே இலக்கு" - ஓ.பன்னீர்செல்வம்

தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டு, சட்டப் பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு என்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டு, சட்டப் பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு என்று,  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பதிவில், இதுவே ஜெயல லிதாவின் கனவு என்றும், அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது தனது அன்பு வேண்டுகோள் என்றும் பதிவிட்டுள்ளார். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என்றும் அவர் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்