காரைக்குடி - மானாமதுரை; 70 கி.மீ தூரத்தை 40 நிமிடத்தில் கடந்த சோதனை ரயில்

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வரை ரயில் பாதை பலப்படுத்தப்பட்டு அதிவேக சோதனை ரயில் இயக்கப்பட்டது.
காரைக்குடி - மானாமதுரை; 70 கி.மீ தூரத்தை 40 நிமிடத்தில் கடந்த சோதனை ரயில்
x
திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வரை ரயில் பாதை பலப்படுத்தப்பட்டு அதிவேக சோதனை ரயில் இயக்கப்பட்டது. திருச்சியில் இருந்து காலை 9.35க்கு கிளம்பிய ரயில் காரைக்குடிக்கு 10.50க்கு வந்தடைந்தது.  அங்கிருந்து 10.58 க்கு கிளம்பி சிவகங்கையில் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட பின் மானாமதுரை ரயில் சந்திப்பிற்கு 11.40க்கு வந்தடைந்தது. காரைக்குடியில் இருந்து 70கி.மீ தூரமுள்ள மானாமதுரை நகரை 40 நிமிடத்தில் 110கி.மீ வேகத்தில் இயக்கி நான்கு பெட்டிகளுடன் அதிவேக ரயில் வந்தடைந்தது. 


Next Story

மேலும் செய்திகள்