மின்சாரம் பாய்ந்து 4 வயது சிறுவன் பலி - மின்விசிறியை ஆன் செய்ய முயன்ற போது விபத்து

சென்னையில் ஸ்விட்ச் போர்டை தொட்ட 4 வயது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் பாய்ந்து 4 வயது சிறுவன் பலி - மின்விசிறியை ஆன் செய்ய முயன்ற போது விபத்து
x
சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. டூவீலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரின் 4 வயது மகன் தருனேஷ்வரன் வீட்டில் மின்விசிறியை இயக்குவதற்காக ஸ்விட்ச் போர்டில் கை வைத்துள்ளார். அப்போது திடீரென ஷாக் அடிக்கவே, சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவனை பெற்றோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுவன் மரணம் குறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்