"கனிமொழியை இந்தியரா? என கேட்டதை சாதாரணமாக கடந்து போக முடியாது" - வைகோ அறிக்கை

இந்தி மொழிதான் ஆட்சி மொழி, அலுவல் மொழி என்பதை வலிந்து நிலைநாட்டபா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக முயன்று வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கனிமொழியை இந்தியரா? என கேட்டதை சாதாரணமாக கடந்து போக முடியாது - வைகோ அறிக்கை
x
இந்தி மொழிதான் ஆட்சி மொழி, அலுவல் மொழி என்பதை வலிந்து நிலைநாட்டபா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக முயன்று வருவதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.  திமுக எம்பி, கனிமொழியிடம் நீங்கள் இந்தியரா? என்று பாதுகாப்புப் படை பெண் அதிகாரி கேள்வி எழுப்பியது தற்செயலானது என்றோ, தெரியாமல் கேட்டுவிட்டார் என்றோ கடந்து போய்விட முடியாது என தனது அறிக்கையில் கூறியுள்ளார். பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்களின் கூட்டமைப்புதான் இந்தியா என்பதையும், இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் சேர்ப்பது பன்பமுகத்தன்மைதான் என்பதையும் உணராமல், பா.ஜ.க. அரசு செயல்படுவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்