சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை - 12 பேர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை - 12 பேர் கைது
x
நேற்று முழு ஊரடங்கு காரணமாக அரசு மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
அதன்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்,அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்