10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆக.17 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆக.17 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
x
கொரோனா அச்சம் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 மாணவர்களும், 4 லட்சத்து 68 ஆயிரத்து 070 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள், மாணவர்கள் அளித்த செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை அந்தந்த பள்ளியிலேயே வழங்கப்படும் என்றும் மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், ஆகஸ்ட் 17 முதல் 25 ஆம் தேதி வரை பள்ளிகளில் நடக்கும் குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்று தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்