ஊரடங்கை மீறி கருணாநிதியின் நினைவு நாளில் கூடியதால் தி.மு.க எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு

திருச்சியில் ஊரடங்கை மீறி, மறைந்த தலைவர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய, எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறி கருணாநிதியின் நினைவு நாளில் கூடியதால் தி.மு.க எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு
x
திருச்சியில் ஊரடங்கை மீறி, மறைந்த தலைவர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய, எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டத்தின் சார்பில்  வி.என்.நகரிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நலத்திட்ட உதவிகளை மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதிக அளவிலான மக்கள் கூடியால்,மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 50 பேர் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்