"நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு செல்ல இ-பாஸ் வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை காண தமிழகத்தில் இருந்து செல்லும் உறவினர்களுக்கு உரிய இ-பாஸ் வாகன வசதிகள் செய்து தர வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு செல்ல இ-பாஸ் வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
xvovt
மூணாறு அருகே நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும், தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார். தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்து அங்கு செல்ல முடியாமல் உறவினர்கள் அனைவரும் கண் கலங்கி - தவித்துக் கொண்டிருப்பதாக தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி தமிழக முதலமைச்சர் நிதியுதவி அளித்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்