நேற்று ஒரு நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை - அதிகபட்சமாக மதுரையில் ரூ. 44.55 கோடிக்கு விற்பனை

இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189 கோடியே 38 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
x
இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189 கோடியே 38 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.  மதுரை மண்டலத்தில் 44 கோடி 55 லட்சத்துக்கும், திருச்சி மண்டலத்தில் 41 கோடி 67 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  சேலம் மண்டலத்தில் 41 கோடி 20 லட்சத்துக்கும், கோவை மண்டலத்தில் 39 கோடி 45 லட்சம் ரூபாய்க்கும் மது  விற்பனை நடைபெற்றுள்ளது.  சென்னை மண்டலத்தில்  22 கோடி 56 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றறுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்