குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள பெண் சாராய வியாபாரியின் சொத்துகள் அரசுடைமையாக்க அனுமதி

வாணியம்பாடியில் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள பெண் சாராய வியாபாரியின் சொத்துக்கள் மற்றும் பணம் அரசுடைமையாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள பெண் சாராய வியாபாரியின் சொத்துகள் அரசுடைமையாக்க அனுமதி
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரில் வசித்து வந்தவர் சாராய வியாபாரி மகேஸ்வரி. இவர் கடந்த  25 ஆண்டு காலமாக அப்பகுதியில் கள்ளசாராயம், கஞ்சா  விற்பனை  செய்து வந்த நிலையில், கடந்த  மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் இருந்த  21 கிலோ கஞ்சா, 20 லட்சம் ரொக்க பணத்தை கைப்பற்றிய போலீசார் அவரது உறவினர்களான உஷா, காவியா, தேவேந்திரன் ஆகியோரையும் கைது செய்து  குண்டர் சட்டத்தில்  சிறையில் அடைந்தனர். 
 
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை நாட்டுடமை ஆக்குவதற்கு நிதி அமைச்சகத்திடம் ஒப்புதல் கேட்கப்பட்டதாகவும் தற்போது அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டபின்,  சொத்துக்கள்  பொது ஏலம் விடப்பட்டு,  மாநில அரசுக்கு ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது  சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ கூடாது எனவும் போலீசார் தடை செய்துள்ளனர். சுமார் 60  முதல் 80  லட்சம் ரூபாய் வரையிலான  சொத்துக்களை  அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்