"அரசு மருத்துவமனைகளில் 85 சதவீதம் பிரசவம்" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவ சதவீதம் 60 இருந்து 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் 85 சதவீதம் பிரசவம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
x
கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவ சதவீதம் 60 இருந்து 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய அவர், தமிழகத்தை  பொறுத்தவரை 80 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள உள்ளதாகவும், தற்போது 19 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். இதனிடையே, பொது நோய் சிகிச்சைகளும் தொய்வின்றி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்