அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்துங்கள் - சுங்கத்துறைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை மணலியில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
x
லெபனான் வெடிவிபத்து எதிரொலியாக, இந்தியாவில் இருக்கும் வெடிக்கும் தன்மையுள்ள பொருட்கள் எங்கெங்கு உள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை மணலியில் சுங்கத்துறை கட்டுப்பாட்டில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து சுங்கத்துறை அறிக்கையில், 2 கிலோ மீட்டர் சுற்றளவில் வீடுகள் இல்லை என கூறியுள்ளதாகவும், ஆனால், அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி 12 ஆயிரம் வீடுகள் உள்ளதாகவும், மாசுக் கட்டுபாட்டு வாரியம் கூறியுள்ளது. 700 மீட்டர் தூரத்தில் 7 ஆயிரம் குடியிருப்புகளும்,1500 மீட்டர் தொலைவில் 5 ஆயிரம் குடியிருப்புகளும் உள்ளது தெரியவந்துள்ளது.  இதனிடையே, உடனடியாக அம்மோனியம் நைட்ரேடை அப்புறப்படுத்துமாறு சுங்கத்துறை ஆணையருக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்