தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 புள்ளி 79 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 110 பேர் உயிரிழந்தால் கொரோனா உயிரிழப்பு தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 4 ஆயிரத்து 571ஆக அதிகரித்துள்ளது. அதே போல, ஒரே நாளில் 6 ஆயிரத்து 272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

சென்னையில் 1091 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 88 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்