பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா புகார் - நாளை விசாரணை நடத்த போலீஸ் திட்டம்

பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா அளித்த புகார் குறித்து, நாளை நேரில் விசாரிக்க சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது.
பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா புகார் - நாளை விசாரணை நடத்த போலீஸ் திட்டம்
x
பிரசாத் ஸ்டுடியோ உரிமை தொடர்பாக இருதரப்புக்கும் இடையிலான வழக்கு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள தனது பிரத்யேக அறையில் இருந்து விலை உயர்ந்த இசை கருவிகள், இசை குறிப்புகள் திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கேட்டுக்கொண்டார். இந்த புகார் குறித்து நாளை பிரசாத் ஸ்டுடியோவில் நேரில் விசாரணை சென்னை மாநகர காவல் திட்டமிட்டுள்ளது. இளையராஜாவுக்கு ஒதுக்கப்பட்ட பிரத்யேக அறையிலும் சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்