தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் - அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். கடலூரில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், மே மாதம் முதல் தற்போது வரை 41 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 30 ஆயிரத்து 664 கோடி ரூபாய் முதலீடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், 67 ஆயிரத்து 212 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story

