குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தலைமைத் தேர்தல் அதிகாரி

செப்டம்பர் 7ஆம் தேதிக்கு பிறகு இடைத் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.
x
குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.பி.சாமி ஆகிய திமுக எம்.எல்.ஏ.க்கள் இருவர் காலமாகினர். இதைத் தொடர்ந்து காலியாக உள்ள அந்தத் 2 தொகுதிகளிலும் ஆறு மாதத்துக்குள் இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் காலியாக உள்ள 56 தொகுதிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. இதனிடையே, கொரோனா பரவல் உள்ளதால், திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் நடத்த முடியாது என தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு  தகவல் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 7ஆம் தேதிக்கு பிறகு, எந்தத் தேர்தலை நடத்தவும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், இரண்டு தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது போன்ற பணிகளை துவங்கி விட்டதாக அவர் தகல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்