காவல் ஆய்வாளர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை
புதுக்கோட்டையில், இரு பிரிவினர் இடையே நடந்த மோதலின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல் ஆய்வாளர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விளக்கம் தருவதற்காக ஆஜரானார்.
புதுக்கோட்டை மாவட்டம் போச்சம்பள்ளியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரு பிரிவினருக்கிடையே நடந்த மோதல் தொடர்பாக கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு காவல் உதவி ஆய்வாளர் சரவணன் வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு புதுக்கோட்டைஆட்சியர் உமா மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி, பொது மக்களிடம் விசாரணை நடத்தி, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட மூன்று காவலர்களுக்கு இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அளித்திருந்தார். அதன்படி, அதன்படி தற்போது காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 3 பேரும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகினர்.
Next Story