செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த இளம்பெண் - நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர்

சென்னையில் செல்போன் பறித்துச்சென்ற திருடர்களை துரத்திச்சென்று பிடித்த இளம்பெண்ணை காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த இளம்பெண் - நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர்
x
ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண்ணான கீதப்பிரியா தான் இந்த பெருமைக்கு சொந்தக்கார‌ர். கடந்த 20 ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் அசோக்நகர் பகுதியில் வேலைக்கு செல்ல காத்திருந்த கீதப்பிரியாவிடம் இருந்து இரு சிறுவர்கள் செல்போனை பறித்துச்சென்றுள்ளனர். சாதுர்யமாக செயல்பட்ட கீதப்பிரியா ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் உதவியுடன் அவர்களை விரட்டியுள்ளார். கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்ததுவமனை அருகே இருசக்கர வாகனத்தை மடக்கிய கீதப்பிரியா, பொதுமக்கள் உதவியுடன் ஒரு சிறுவனை பிடித்துள்ளார். இந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி,  செல்போனுடன் தப்பி சென்ற மற்றொரு சிறுவனையும், குமரன் நகர் போலீசார்  கைது செய்துள்ளனர்.  சாதுர்யமாக செயல்பட்டு திருடர்களை பிடிக்க உதவிய இளம்பெண் கீதாவை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்