கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்துள்ளதால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
இந்தியாவின் 2-வது பிளாஸ்மா வங்கி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், 2 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தொடங்கி வைத்த பின் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ண‌ன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ராஜீவ்காந்தி மருத்துவமனையை தொடர்ந்து, ஸ்டான்லி, ஓமந்தூரார், சேலம், திருச்சி, கோவை, நெல்லை அரசு மருத்துவமனைகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கண்தானம் , உறுப்புதானம், ரத்த தானத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் இனி பிளாஸ்மா தானத்திற்கும் அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு விடுத்தார். 

கொரோனா காலத்தில் 444 பேர் உயிரிழந்த நிலையில்,  இந்த எண்ணிக்கையும் கொரோனா மரணமாக கணக்கில் சேர்க்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்