2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை - எய்ட்ஸ் பயத்தால் கொலை செய்ததாக தகவல்
சிவகாசி அருகே எய்ட்ஸ் நோய் இருக்கும் என்ற அச்சத்தில் 2 பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து தப்பிச்சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளிராஜ். இவர் கால்நடை ஆய்வாளர் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி தங்க புஷ்பம். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். கடந்த சில வருடத்திற்கு முன் ஒரு பெண்ணுடன் தவறான பழக்கம் காளிராஜூக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு எய்ட்ஸ் இருக்குமோ? என அச்சமடைந்துள்ளார். இதையடுத்து தன் மனைவி மற்றும் பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். ஆனால் எய்ட்ஸ் இல்லை என முடிவுகள் வந்தாலும் இவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடந்த சில மாதங்களாக வேலை இல்லாததால் வீட்டில் இருந்த காளிராஜூக்கு மன அழுத்தம் அதிகமாகவே, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து தன் பிள்ளைகள் 2 பேரையும் கழுத்தை நெறித்து கொன்ற காளிராஜ், தன் மனைவியையும் கொல்ல முயன்றார். மேலும் குடும்பத்துடன் சேர்ந்து சாகலாம் வா என கூறியபடி வந்துள்ளார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு கிராமமக்கள் வரவே, காளிராஜ் தப்பி ஓடினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தைகளின் சடலங்களை மீட்டதோடு, தப்பிஓடிய காளிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

