முதலமைச்சர் முன்னிலையில் தமிழகத்தில் முதலீடு செய்ய 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்கள் 10 ஆயிரத்து 399 கோடி ரூபாய் முதலீடு செய்ய, முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
x
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், விழுப்புரம், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 10 ஆயிரத்து 399 கோடி முதலீடு செய்யப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 13 ஆயிரத்து 507 நபருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. 8 திட்டங்களில் 5 திட்டங்களுக்கு நேரடியாகவும் 3 திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலமாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரக்கடத்தில் விக்ரம்சோலார் என்ற நிறுவனம் 5 ஆயிரத்து 423 கோடி முதலீடு செய்ய உள்ளது. கோயமுத்தூரில்,  200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. 
விழுப்புரத்தில், முந்திரி பதப்படுத்தும் தொழிலில் 36 கோடி ரூபாய் முதலீடு 
சிங்கபெருமாள் கோவில் அருகே 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு, 
ராணிப்பேட்டையில் 200 கோடி  ரூபாய் முதலீடு கோயம்புத்தூரில் ஜே.எஸ். ஆட்டோ நிறுவனம் 400 கோடி முதலீடு கீரனூரில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் காற்று அமுக்கிகள் உற்பத்தி தொழில் ஈரோடு மாவட்டம் சிப்காட் பெருந்துறை தொழில் பூங்காவில் 40 கோடி ரூபாய் முதலீடு.

Next Story

மேலும் செய்திகள்