மானியத்துடன் படகு, வலைகள் வழங்குவதாக உறுதி - அரசின் உறுதிமொழியை ஏற்று மீனவர்கள் ஒப்படைப்பு

கடலூர் சோனாங்குப்பம் மீனவ கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த 17 சுருக்கு வலைகள் மற்றும் படகுகளையும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
x
சுருக்குவலை பயன்படுத்தாத மீனவர்களுக்கு தமிழக அரசு 40 சதவீத மானியத்துடன் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வழங்குவதாக உறுதி அளித்திருந்தது. மேலும் 50 சதவீதம் மானியத்துடன் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வலைகள் வழங்கப்படும் எனவும், தற்போது பயன்பாட்டில் உள்ள இழுவை படகுகளை 15 லட்சம் ரூபாய் மானியத்துடன் சாதாரண படகுகளாக மாற்றுவதற்கான திட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று, தமிழகத்திலேயே முதன்முறையாக சுருக்குவலை மீனவர்கள் தங்களது வலைகளையும் படகுகளையும் அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்