கட்டுப்பாடற்ற கருத்து சுதந்திரம் - அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கும் யூ ட்யூப்

மற்றவர்கள் மீதான வெறுப்புணர்வை காட்டுவதற்காகவே யூ ட்யூப் பயன்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வி பல தரப்பில் இருந்தும் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்த சர்ச்சைகளையும், பின்னணியையும் இப்போது பார்க்கலாம்.
கட்டுப்பாடற்ற கருத்து சுதந்திரம் - அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கும் யூ ட்யூப்
x
மற்றவர்கள் மீதான வெறுப்புணர்வை காட்டுவதற்காகவே யூ ட்யூப் பயன்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வி பல தரப்பில் இருந்தும் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்த சர்ச்சைகளையும், பின்னணியையும் இப்போது பார்க்கலாம்.

கருத்து  மோதல்கள், தனி மனித தாக்குதல்கள் என சமீப காலமாக சமூக வலைத்தளங்களால் பரபரப்புகளுக்கு பஞ்சமே இல்லாத சூழல். ஒருவரை ஒருவர் வசவு பாடிக் கொண்டு இருக்கும் வீடியோ காட்சிகள் டிரெண்டிங்கில் இருப்பதும், அது பலரால் பகிரப்படுவதுமே அதற்கு சாட்சி. 

யார் வேண்டுமானாலும் ஒரு யூ ட்யூப் சேனலை துவக்கி அதை நடத்தலாம் என இருப்பதால் ஆளாளுக்கு ஒரு சேனலை கை வசம் வைத்திருக்கிறார்கள். இதனால் தனக்கு எதிரான ஒருவர் மீது கோபத்தை வெளிக்காட்ட சமூக வலைத்தளத்தை நாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். 

இது ஒரு புறம் என்றால் வடிவேலு படத்தில் வருவது போல ஒரே நைட்டில் ஒபாமா ஆக வேண்டும் என நினைத்து பப்ளிசிட்டிக்காக சர்ச்சைகளை உருவாக்குவோரும் உண்டு. அப்படி ஒரு சம்பவத்திற்கு சமீபத்திய உதாரணம் வனிதா விஜயகுமார் விவகாரம்...

வனிதாவின் திருமணம் பலரால் பேசப்பட்ட போதும், அவரைப் பற்றி ஆபாசமான வார்த்தைகளால் வறுத்தெடுத்தார் சூர்யாதேவி என்ற பெண். அதிக லைக்ஸ் வேண்டும், அதிக சப்ஸ்க்ரைபர்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பேசிய பேச்சுக்களும் அதிகம். 

இதனிடையே தான் கறுப்பர் கூட்டம் சேனல் விவகாரம் விஸ்வரூபமானது. கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அந்த யூட்யூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில் வாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

ஆனால் இதுபோன்ற யூ ட்யூப் சேனல்கள் பகையை வளர்க்கவும், பல்வேறு மோதல்களை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுவது வேதனைக்குரியது என்கிறார் வழக்கறிஞர் பாலு

ஒரு தரப்பு கருத்துகளால் பொங்கி எழுந்து கைது நடவடிக்கைகள் தொடரும் அதே வேளையில் மற்ற தரப்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தும் இங்கே முன்வைக்கப்படுகிறது. 

தகவல் தொழில் நுட்ப சட்டப்படி, நடவடிக்கைகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த இயலாது என்றாலும் கூட சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் குறையும் என்ற கருத்தையும் முன்வைக்கிறார் பாலு

சமூக ஊடகங்களை பொறுப்பில்லாமல் பலரும் பயன்படுத்துவதே இதுபோன்ற சர்ச்சைகளுக்கெல்லாம் துவக்கப்புள்ளி என்பதால், அதை வரம்புகளுக்குள் வைத்திருப்பதும் நன்மை பயக்கும். உண்மையான எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பதை ஆரோக்கியமான களமாக மாற்றுவதே எதிர்காலத்திற்கு நல்லது...

Next Story

மேலும் செய்திகள்