காதலிக்க மறுத்த பெண் கத்தியால் குத்திக் கொலை - காதலுக்கு தடையாக இருந்த பெண்ணின் தந்தைக்கும் கத்திக்குத்து

கோவையில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
கோவை பேரூர் செட்டிபாளையம் அடுத்த ஆறுமுக கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தீஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஐஸ்வர்யாவின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ரத்தீஷ் உடன் ஐஸ்வர்யா சில மாதங்கள் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரத்தீஷ், காதலியை நேரில் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா காதலிக்க மறுக்கவே ஆத்திரமடைந்த ரத்தீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினார். இதை பார்த்து காப்பாற்ற வந்த ஐஸ்வர்யாவின் தந்தை சக்திவேல் மீதும் கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பி ஓடிய ரத்தீஷை போலீசார் தேடி வருகின்றனர். கோவையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்