காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
x
காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இடியுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது

5வது நாளாக மழை - அதிகரிக்கும் குளிர்



கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதியில் தொடர்ந்து 5வ‌து நாளாக‌ கனமழை பெய்த‌து. மூன்று ம‌ணிநேர‌த்திற்கும் மேலாக‌ இடியுட‌ன் கூடிய‌ மழையால் விவ‌சாயிக‌ள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை


நீலகிரி மாவட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, நடுவட்டம், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் பல்வேறு அணைக்கட்டுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மலைப்பகுதியில் அடர்த்தியான மேக மூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரம‌ம் அடைந்துள்ளனர். மழை காரணமாக நீலகிரியில் கடும் குளிர் நிலவுகிறது. 

பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் மழை


தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பரவலாக மழை பெய்த‌து. கும்பக்கரை, முருக மலை, வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதியில் 2 மணி நேரத்திற்கும் கனமழை பெய்த‌து. கடந்த சில நாட்களாக பெரியகுளம் பகுதியில் பெய்துவரும் மழையால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



ஒருமணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை


வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த‌து. இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையால், சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் ஓடியது. தொடர் மழையால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்