வெங்காய மூட்டைகளுக்கு அடியில் வைத்து கஞ்சா கடத்தல் - 42 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
வெங்காய மூட்டைகளுக்கு அடியில் வைத்து கஞ்சா கடத்தல் - 42 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது
x
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வெங்காய மூட்டைகள் ஏற்றி வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டதில் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 42கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த ஞானராஜ், புருஷோத்தமன் ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்