நிதி நிறுவன மோசடியில் சினிமா பிரபலங்களுக்கு தொடர்பா?

ராமநாதபுரத்தில் நடந்த நிதி நிறுவன மோசடியில் சினிமா பிரபலங்களுக்கு தொடர்பா? என விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நிதி நிறுவன மோசடியில் சினிமா பிரபலங்களுக்கு தொடர்பா?
x
ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் துவங்கி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் வசித்துவந்த நீதிமணி, அவரது மனைவி மணிமேகலை,மற்றும் சாயல்குடி பகுதியில் வசித்து வந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்ததுடன் நீதிமணியும், ஆனந்தும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், நீதிமணி வசூலித்த பணத்தினை வெளிநாடுகளில் ஹவாலா முதலீடு செய்ததாகவும், பிரபல சினிமா விநியோகஸ்தர்களிடம் முதலீடு செய்துள்ளதும் தெரியவந்தது. நீதிமணி  சொந்தமாக பட நிறுவனம் ஆரம்பித்து அதன் மூலம் பிரபல நடிகர்களை வைத்து படம் தயாரிப்பதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து, பிரபல திரைப்பட விநியோகஸ்தர்கள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்