"கள்ளத்துப்பாக்கி மூலம் ஒரு எம்.எல்.ஏ. சுட்டது ஏற்க முடியாது" - அமைச்சர் ஜெயக்குமார்

திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராயபுரம் மண்டலத்தில் உள்ள டெலி கவுன்சிலிங் மையத்தை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டத்தை கையில் எடுத்து கொண்டு,  ஒரு சட்டமன்ற உறுப்பினர் சுட்டது ஏற்க முடியாத செயல் என்று தெரிவித்தார். தானும் உரிய உரிமத்துடன் 2 துப்பாக்கிகள் வைத்துள்ளதாக தெரிவித்த ஜெயக்குமார், திமுக எம்எல்ஏ-க்களை கண்டாலே மக்கள் பயப்படுவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்