பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது

சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது
x
சென்னை சாலிகிராமம் காமராஜர் சாலையில் ஓட்டல் கடை நடத்தி வரும் விஜய் என்பவரின் கடைக்கு தினமும் இரவு டிப் டாப் ஆன போலீஸ் ஒருவர் வருவது வழக்கம். 

மிரட்டல் தொனியுடன் வரும் அவர், கடைக்காரரை மிரட்டி பரோட்டா, தோசை, சப்பாத்தி என பார்சல் வாங்கிச் செல்வது வழக்கம். மிடுக்கான தோற்றத்தில் இருந்த அவர் போலீஸ் என்ற ஒரு வார்த்தையை சொல்லி தினமும் தன் பையை நிரப்பிக் கொன்று சென்றுள்ளார். அப்படியே பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்கும் சென்று ஓசியில் சிகரெட், குளிர்பானங்களை வாங்கிச் செல்வதும் வழக்கம். 

சம்பவத்தன்று கடைக்கு சென்ற அவர், 10 பரோட்டா, 3 தோசை பார்சல் கட்டுங்கள் என கூறி கடைக்காரரை மிரட்டியிருக்கிறார். ஆனால் பார்சல் வர தாமதம் ஆனதால் கடைக்காரருக்கும் மிரட்டல் போலீஸூக்கும் இடையே பிரச்சினை வந்துள்ளது. இந்த தகவல் விருகம்பாக்கம் போலீசாருக்கு செல்லவே, சம்பவ இடத்திற்கு நிஜ போலீசார் வந்தனர். 

அப்போது தான் இத்தனை நாட்களாக மிரட்டி பரோட்டா பார்சல் வாங்கி வந்தவர் போலி போலீஸ் என தெரியவந்தது. சிவக்குமார் எனும் அவர் நிலத் தரகராக இருந்துள்ளார். ஆனால் ஊரடங்கால் வேலை இல்லாமல் போகவே சாப்பாட்டுக்கு என்ன செய்வதென யோசித்த போது தான் போலீஸ் வேஷம் போட முடிவெடுத்து இருக்கிறார். 

ஊரடங்கால் வேலை இல்லாமல் இருந்ததால் சாப்பாட்டுக்கும் செலவுக்கும் பணம் வேண்டி போலீஸாக தன்னை ஒப்பனை செய்திருக்கிறார் மோசடி மன்னன் சிவக்குமார்....கைதான சிவக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

Next Story

மேலும் செய்திகள்