11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய  கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம்,  கடலூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சூறாவளி காற்று வீசும் என்பதால் வடக்கு அரபிக்கடல்,  கேரள கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்