சுருக்குமடி வலை விவகாரம் : அதிகாரிகள், போலீசாரை மீனவர்கள் முற்றுகை

நாகை மாவட்டத்தில், சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரியும், எதிர்ப்பு தெரிவித்தும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
x
நாகை மாவட்டத்தில், சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரியும், எதிர்ப்பு தெரிவித்தும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக நம்பியார் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிடிக்கப்பட்ட மீன்களை பறிமுதல் செய்யக் கூடாது என தெரிவித்த மீனவர்கள்,   
உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்