சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் - 11,120 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு

மருத்துவ முகாம் மூலம் மட்டும் 11 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் - 11,120 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு
x
சென்னையில் 15 மண்டலங்களிலும் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ  முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம் மூலம் பொதுமக்களின் வெப்ப பரிசோதனை, சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை14 ஆயிரத்து 738 மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில், 9 லட்சத்து 38 ஆயிரத்து 613 பேரை சோதனை செய்ததில் சுமார் 41 ஆயிரத்து 868 ஆயிரம் பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு  சோதனை மேற்கொண்டதில் 11 ஆயிரத்து 120  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்