கொரோனா தடுப்பு நடவடிக்கை அடுத்த கட்டம் என்ன? - முதலமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
x
கொரோனா பாதிப்பில் இரண்டாவது  இடத்தில் உள்ளது தமிழகம். இந்த நிலையில், கொரோனா பாதிப்பின் நிலை குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு நியமித்துள்ள சுகாதார குழு மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் சென்னை வந்தது. சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான 7 பேர் குழுவில் உள்ளனர். நேற்று சென்னையில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.  இதனைத் தொடர்ந்து   ராஜீவ்காந்தி மருத்துவமனை, கிங்ஸ் வளாகத்தில் உள்ள கொரோனா பிரத்யேக மருத்துவமனை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், டி.எம்.எஸ் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். பின்னர், தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து, நோய் தொற்றின் நிலை, மருத்துவ வசதி, கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், தொற்று அதிகம் உள்ள மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சேலம், தேனி, ராணிப்பேட்டை, விருதுநகர் ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்கள் உடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, இன்று காலை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில்,  அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்