அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி - ஆகஸ்ட் வரை நீட்டிப்பு - பள்ளி கல்வித் துறை அறிவிப்பு

வரும் 26-ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு, செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
x
வரும் 26-ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு, செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து,  நீட் தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் முடியும் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது .இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 7 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுத உள்ளனர். இவர்களுக்கு e-box என்ற நிறுவனத்தின் சார்பில் ஆன்-லைன் வழியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் இரண்டாவது வாரம் வரை நடைபெற இருந்த பயிற்சி வகுப்பு, ஆகஸ்ட் மாதம் முழுவதும் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்