சாத்தான்குளத்தில் தந்தை,மகன் கொல்லப்பட்ட சம்பவம் - சிபிஐ விசாரணை நாளை தொடங்குகிறது

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நாளை தொடங்குகிறது.சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வருகிறார்கள்.
x
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நாளை தொடங்குகிறது.சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வருகிறார்கள். சாத்தான்குளம் வழக்கை ஏற்கெனவே விசாரித்துவரும் சிபிசிஐடி இதுவரை 10 பேரை கைது செய்துள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையம், கிளை சிறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விசாரணையின் முழுமையான அறிக்கையை 28 ஆம் தேதி சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், கைது செய்யப்பட்டவர்களை 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்