கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்தை கண்டறிந்த தமிழர் - நம் மண்ணின் மணிமகுடத்தில் மேலும் ஒரு விலை மதிப்பற்ற கல்
பதிவு : ஜூலை 09, 2020, 08:16 AM
கொரோனாவுக்கு இந்தியாவின் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளரான கிருஷ்ணா எல்லா தமிழகத்தை சேர்ந்தவர்.
நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொ​ரோனாவுக்கு தீர்வு என்ன? என எல்லோரும் அல்லாடிக் கொண்டிருக்கும் சூழலில் இந்தியாவின் முதல் கண்டுபிடிப்பாக வெளியானது தான் கோவேக்சின் மருந்து. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான இந்த மருந்தை மனிதர்கள் மீது சோதனை நடத்த ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்து அதற்கான பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனிடையே இந்த பாரத் பயோ டெக் நிறுவனத்தின் உரிமையாளரான கிருஷ்ணா எல்லா தமிழகத்தை சேர்ந்தவர் என்ற செய்தி நமக்கெல்லாம் பெருமையளிக்க கூடியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள நெமிலி என்ற கிராமத்தில் விவசாயி ஒருவரின் மகனாக பிறந்தவரே கிருஷ்ணா எல்லா. அங்குள்ள பள்ளியில் படிப்பை முடித்து விட்டு ரோட்டரி திட்டத்தின் உதவியால் அமெரிக்காவிற்கு படிக்க சென்றுள்ளார். படிப்பு முடித்து அங்கேயே தங்க தீர்மானித்தவரை அவருடைய தாய் அன்புக்கட்டளை இட்டு மீண்டும் இந்தியாவிற்கு வரவழைத்துள்ளார். தன்னுடைய நாட்டு மக்களுக்கு தன் மகன் பணியாற்ற வேண்டும் என அவர் விரும்பிய கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த கிருஷ்ணா எல்லா, ஹைதராபாத்தில் தன்னுடைய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 1995ல் மாசு இல்லாத தொழிற்பூங்காவை உருவாக்க திட்டமிட்ட சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு முதல் வடிவம் கொடுத்தது இவரின் பாரத் பயோ டெக் நிறுவனம். இங்கு இருந்து தான் ஜிகா வைரஸூக்கான மருந்தை கண்டுபிடித்துள்ளார் கிருஷ்ணா எல்லா. இந்த தடுப்பூசிக்கு 30 முதல் 40 டாலர்கள் வரை உலக நாடுகள் விலை நிர்ணயித்த போதிலும் ஏழை மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு டாலருக்கு மருந்தை அறிமுகப்படுத்தியவர் இவர்... இந்த மலிவு விலை மருந்து பலரால் கொண்டாடப்பட்டது. இந்த சூழலில் தான் கொரோனாவை கொல்ல கோவேக்சின் மருந்தை கண்டுபிடித்திருக்கிறார் கிருஷ்ணா எல்லா. கோவேக்சின் இந்தியாவின் முதல் தடுப்பூசி என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்த மருந்தை கண்டறிந்த கிருஷ்ணா எல்லாவை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் அவரது சொந்த ஊர் மக்களும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

279 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

149 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

49 views

பிற செய்திகள்

யானைக்கு தீ வைப்பு சம்பவம் ; இருவர் கைது - சிறையில் அடைப்பு

மசினகுடியில் காட்டு யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கௌசல் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

0 views

சிறுத்தையை கொன்று தின்ற கும்பல்

கேரளாவில் சிறுத்தையை பொறி வைத்து பிடித்து அதை கறி சமைத்து சாப்பிட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

4 views

தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் படகு மூழ்கி உயிரிழந்த தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

8 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

49 views

இளவரசிக்கு கொரோனா உறுதி

சசிகலாவை தொடர்ந்து, அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

82 views

தமிழக மீனவர்கள் மீது கேரள மீனவர்கள் கொடூர தாக்குதல் - கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள்

கேரள மாநிலம் கொச்சியில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

286 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.