தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை
x
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

வேலூரில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொட்டிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உண்டானது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஆரணியின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

திடீர் மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மில்கேட், நாவினிபட்டி, சுக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மக்களை வாட்டிய வெயில் - மகிழ்வித்த மழை

குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ளது. கே.வி.குப்பம், கல்லப்பாடி, சென்றாம்பள்ளி  உள்ளிட்ட பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்துள்ளது. இந்நிலையில் மாலை அப்பகுதிகளில் கனமழை பெய்தது.

மழை : தேயிலை மகசூல் அதிகரிக்கும் - விவசாயிகள் மகிழ்ச்சி

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ளது. காட்டேரி, பர்லியார், அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளில், கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மலைப்பாதையில் ஓடிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மலைப்பகுதிகளில் பெய்த  தேயிலை மகசூலுக்கு உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கனமழை காரணமாக தொடரும் மின்வெட்டு - கடும் குளிரால் வாடும் மக்கள்

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அப்பர் பவானி, முதுமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக மேகமூட்டம் சூழ்ந்துள்ளதால், பகலிலேயே முகப்பு விளக்கை அணைக்காமல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அப்பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழையால் அப்பகுதிகளில் நிலவும் கடும்குளிரும் மக்களை மேலும் வாட்டுகிறது.

Next Story

மேலும் செய்திகள்