கேரளா எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி - தமிழக ஆதிவாசி மாணவிக்கு வனத்துறையினர் பாராட்டு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமுட்டி என்ற ஆதிவாசி கிராமம் உள்ளது.
கேரளா எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி - தமிழக ஆதிவாசி மாணவிக்கு வனத்துறையினர் பாராட்டு
x
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமுட்டி என்ற ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த செல்வமுத்து என்பவரது மகள் ஸ்ரீதேவி, கேரளாவில் நடந்த எஸ்எஸ்எல்சி தேர்வில் கலந்துகொண்டு வீடு திரும்பி இருந்தாள். இந்நிலையில், தேர்வு முடிவு வெளியானது. தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவி ஸ்ரீதேவியை பாராட்டும் விதமாக ஆனைமலை புலிகள் காப்பக துணைகள இயக்குனர் ஆரோக்கியராஜ் நினைவு பரிசு வழங்கினார்.

உப்பள பகுதி இடித்து அகற்றம் - வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட கலைஞான புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், அரசின் சார்பில் சிப்காட் நிறுவனம் அமைத்திட புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணியானது தொடங்கியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுமார் 180 ஏக்கர் பரப்பிலான உப்பள பகுதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு நிலுவையில் உள்ள நிலையில், உப்பள பகுதி பாலம் மற்றும் அறைகளை மாவட்ட நிர்வாகம் இடித்து தள்ளி உள்ளதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மலை கிராம மக்களுக்கு சாலை வசதி - 75 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றப்படும் கோரிக்கை


கிருஷ்ணகிரி மாவட்டம் நாரலபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் சாலை வசதி இன்றி பேருந்தில் பயணிக்க சுமார் 4 புள்ளி 6 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில், இந்த மக்களின் 75 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக 2 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில்  சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் நேரில் ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணை மதகுகள் - வருடாந்திர பராமரிப்பு பணிகள்


மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள 16- கண் மதகுகளை உயர்த்தி வர்ணம் பூசுதல், கிரிஸ் அடித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வருடாந்திர பராமரிப்பு பணியை மேல் காவிரி வடிநில வட்ட சிறப்பு தலைமைப் பொறியாளர் ஜெயகோபால் ஆய்வு செய்தார். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் இன்னும் ஒரு வாரத்தில் பராமரிப்பு பணி நிறைவடையும் என தெரிவித்தார்.

திருமணமான 48 நாட்களில் புதுப்பெண் தற்கொலை


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காமராஜபுரத்தில் வசித்து வரும் அனுஸ்ரீக்கு திருமணமாகி 48 நாட்களே ஆன நிலையில், கணவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து கணவர் உதயகுமார் மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அனுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவரவில்லை.

மர்மமான முறையில் முதியவர் பலி


சென்னை திருவொற்றியூரில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தின் வாயில் முன்பு முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் தேரடி பகுதியை அந்த முதியவர் அப்பாராவ் கடந்த 5 நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தேவாலயம் முன்பு சடலமாக மீட்கப்பட்ட அப்பாராவ், வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்