வைப்பீட்டாளர்களின் நலனுக்காக 'TNPFCL' செயலி அறிமுகம் - செயலியை துவக்கி வைத்த முதலமைச்சர்

மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் செயலியும், புதிய வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
வைப்பீட்டாளர்களின் நலனுக்காக TNPFCL செயலி அறிமுகம் - செயலியை துவக்கி வைத்த முதலமைச்சர்
x
மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் செயலியும், புதிய வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மற்றும் வலைத்தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். வைப்பீட்டாளர்களின் நலனுக்காக இந்த செயலியும் வலைத்தளமும் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்விசை நிதி அமைப்பின் செயல்பாடுகளை தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் செயல்படுத்திடும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வைப்பீட்டாளர்கள் கணக்கை துவக்குதல், புதுப்பித்தல், முதிர்வடைந்த தொகையை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்