கீழடி அருகே கொந்தகையில் அகழாய்வு - குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் நேற்று மற்றொரு குழந்தையின் எலும்பு கூடு கண்டறியப்பட்டுள்ளது.
கீழடி அருகே கொந்தகையில் அகழாய்வு - குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுப்பு
x
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் நேற்று மற்றொரு குழந்தையின் எலும்பு கூடு கண்டறியப்பட்டுள்ளது. சுரேஷ் என்பவரது நிலத்தில் இதுவரை 12 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்கு கூடுதல் குழிகள் தோண்டும் போது, கடந்த மாதம் 19ஆம் தேதி 75 செ.மீ நீளமுள்ள குழந்தையின் எலும்பு கூடு கண்டறியப்பட்டது. மேலும் இந்த இடத்தில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடந்த போது அருகிலேயே 65 செ.மீ நீளத்தில் மற்றொரு குழந்தையின் எலும்பு கூடும் முழு அளவில் கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த 2 எலும்பு கூடுகளையும் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்