தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை
x
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், இடியுடன் கூடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் நல்ல மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. தொடர் மழையால், திருவண்ணாமலையில் குளிர்ந்த சூழல் நிலவியது. 

திருச்செங்கோடு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாலை நேரம், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நல்ல மழை பெய்தது. இதனால்  சாலைகளில் மழை வெள்ளம் ஓடியது, மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 2 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கனமழை பெய்தது. 
இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை பெய்த பகுதிகளில் முழுவதுமாக மின் நிறுத்தம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Next Story

மேலும் செய்திகள்