துவைத்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பருத்தியால் ஆன முழு கவச ஆடை அறிமுகம்

மருத்துவர்களுக்காக பருத்தியால் ஆன முழு கவச ஆடையை திருப்பூர் தனியார் பின்னலாடை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
துவைத்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பருத்தியால் ஆன முழு கவச ஆடை அறிமுகம்
x
மருத்துவர்களுக்காக பருத்தியால் ஆன முழு கவச ஆடையை திருப்பூர் தனியார் பின்னலாடை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும், பிபி கிட் எனப்படும் முழு கவச ஆடைகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் இழைகள் கொண்டு தயாரிக்கப்படுவதால்,  அணியும் போது காற்று உட்புகாமல் மிகவும் அசௌகரியமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்று, பருத்தி துணியில் முழு கவச ஆடைகளை தயாரித்துள்ளது. இந்த ஆடை துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த ஏதுவாக உள்ளதால், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்